ஏ.டி.எம் கொள்ளையின் போது பைக் ஓட்ட 1 லட்சம் தந்தார்கள் – கொள்ளையன் வாக்குமூலம்!

Virender confessed to giving 1 lakh for driving a bike while robbing ATMs in Tamil Nadu.

தமிழகத்திற்கு வந்து ஏடிஎம்களில் கொள்ளையடிக்கும் போது பைக் ஓட்டுவதற்காக தனக்கு 1 லட்சம் தந்ததாக கைது செய்யப்பட்ட கொள்ளையன் வீரேந்தர் வாக்குமூலம்.

தமிழகத்தில் உள்ள பல எஸ்.பி.ஐ வங்கி ஏடைம் மையங்களை குறி வைத்து கடந்த மாதம் 17 முதல் 19 ஆம் தேதி வரை நூதன முறையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் 1 கோடிக்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில், கொள்ளையர்கள் யார் என்பது குறித்து கண்டறிய தனிப்பிரிவு அமைக்கப்பட்டதுடன், மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் 10 பேர் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் சில கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அமீர் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளன. மேலும், வீரேந்தர் என்பவனும் கைது செய்யப்பட்டுள்ளான்.

தற்பொழுது வீரேந்தரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகத்திற்கு வந்து ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கும் போது பைக் ஓட்டினால் ஒரு லட்சம் தருவதாக கூறி அமீர் அழைத்து வந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.