தமிழகத்தில், மின் கட்டணம் செலுத்த இன்று தான் கடைசிநாள் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 -ம் தேதி வரை(அதாவது இன்று வரை ) அவகாசம் கொடுப்பதாக தமிழக மின்சார வாரியம் கூறியிருந்தது.
இதைத்தொடர்ந்து, இன்றுடன் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் முடிகிறது. சென்னைம், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூலை 5 வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் என அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.