தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதற்கு நீதி வேண்டும் அரசியல் கட்சியினர்,சினிமா பிரபலங்கள்,விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதில் சாத்தான்குளம் மிருகத்தனமான குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்களை தக்க சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற குற்றங்களை மீண்டும் யாரும் செய்யாத அளவிற்கு தண்டனை இருக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
unknown node