சாத்தான்குளம் தந்தை ,மகன் கொலை வழக்கு – 5 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை இன்று நேரில் ஆஜராகியுள்ளனர்.

தந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை இன்று நேரில் ஆஜராகியுள்ளனர்.

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இதனிடையே இந்த வழக்கினை முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.எனவே முதலில் கைதான காவலர்களை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,5 பேரையும்  இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில்  தந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள்  ரகு  கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர்  நேரில் ஆஜராகியுள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை ,மகன் கொலை வழக்கு – 5 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்