பாடகர் எஸ்.பி.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த 5-ம் தேதி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியனினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் எஸ். பி. பாலசுப்பிரமணியனின் உடல்நிலை கடந்த 15-ம் தேதி மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதன் பிறகு எஸ். பி. பாலசுப்பிர மணியனின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருவதோடு, அவரது மகனான எஸ். பி. சரணும் வீடியோ மூலம் தந்தையின் உடல்நலம் குறித்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியம் உடல் நிலை குறித்து தகவல் கூறியுள்ளார். அதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளார்.