சாலைகளை காணவில்லை! கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம்!

சாலையை காணவில்லை என அறிவிப்பு பலகை வைத்த பொதுமக்கள்.

சாலையை காணவில்லை என அறிவிப்பு பலகை வைத்த பொதுமக்கள்.

சாத்தூர் மேளகாந்திநகர் பகுதியில்,  பாதாளசாக்கடை பணிகளுக்காக, சாலைகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பாதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், சாலைகள், குழிகள்  அப்படியே விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பகுதியில் ,பெய்த மழையால், சாலையே சேரும், சகதியுமாக காணப்படுகிறது. அப்பகுதி  மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் சாலையை காணவில்லை என அறிவிப்பு பலகை வைத்துள்ள நிலையில், விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையும்  வைத்துள்ளனர்.