மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் சங்கம் மற்றும் 40 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சார்பில் பேரணி எழுச்சியோடு நடைபெற்றது. மேலும், மேலூரில் இருந்து தமுக்கம் அருகே அமைந்துள்ள மத்திய அரசின் தலைமை தமிழ் தபால் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதனால் தல்லாகுளம் வழியாக தமுக்கம், கோரிப்பாளையம் செல்லும் சாலையில் சாலை முழுவதும் வாகனம் […]
சென்னை:அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சேதமடைந்த பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை கணக்கெடுப்பு செய்து புதிய சாலைகள் அமைக்கவும்,பணிகளை விரைவாக தொடங்கிடவும்,பணி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு சாலையின் தரம் உள்ளதா என்பதை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்னதாக உத்தரவிட்டிருந்தார். மேலும்,கடந்த 13.01.2022 […]
சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து செல்வதுடன், உரிமையாளருக்கு முதல்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று நாட்களுக்குள் உரிமையாளர்கள் கால்நடைகளை அபராதம் செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மூன்று நாளில் பெற்று […]
குஜராத் மாநிலத்தில் கனமழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அம்மாநில முதல்வர் ரூ.74.70 கோடி ஒதுக்கியுள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன.இந்நிலையில், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்கு முகமந்திரி ஷஹேரி சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.74.70 கோடியை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் ஒதுக்கியுள்ளதாக முதல்வர் அலுவலகம் (சிஎம்ஓ) தெரிவித்துள்ளது. மேலும்,சிம்ஓ தகவலின்படி,இந்த தொகையை தெர்மோபிளாஸ்டிக் சாலை பெயிண்ட், கர்ப்ஸ் பெயிண்ட், தெரு விளக்கு பலகை மற்றும் […]
கோடம்பாக்கம் – ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், இது ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் கோடம்பாக்கம் மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள பவர்ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 100 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற உள்ளதால், கோடம்பாக்கம் ஆற்காடு சாலை வரையிலான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஒரு ஆண்டுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி போரூரில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக செல்லக்கூடிய வாகனங்களில் […]
சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைத்த காரணத்தால் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி-ஒட்டானம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் சாலையை ஆய்வு செய்யுமாறு நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சாலையின் தரம் மற்றும் அப்பகுதியில் குறைபாடு இருந்துள்ளது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தரமற்ற சாலைகளை அமைத்த பொறியாளர்களான மாரியப்பன், மருதுபாண்டி, நவநிதி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். […]
கர்நாடகாவில்,கொரோனா தொற்று பரவுதல் அச்சம் காரணமாக உதவிக்கு யாரும் வராததால் பெண் ஒருவர் நடுரோட்டில் துடிதுடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்,கோலார் மாவட்டத்தில் வசித்து வந்த பெண்(வயது 50) ஒருவர்,கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனையடுத்து,நேற்று காலை மருத்துவமனைக்கு புறப்பட்டு செல்லும் வழியில் திடீரென்று மயங்கி விழுந்தார்.கொரோனா தொற்று பாதித்திருக்கும் என்பதால் அப்பெண்ணுக்கு உதவி செய்ய ஒருவர் கூட முன்வரவில்லை.அதற்குப் பதிலாக ரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அப்பெண்ணை […]
சாலையை காணவில்லை என அறிவிப்பு பலகை வைத்த பொதுமக்கள். சாத்தூர் மேளகாந்திநகர் பகுதியில், பாதாளசாக்கடை பணிகளுக்காக, சாலைகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பாதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலைகள், குழிகள் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பகுதியில் ,பெய்த மழையால், சாலையே சேரும், சகதியுமாக காணப்படுகிறது. அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், அப்பகுதி […]
சாலை விதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. சாலை விதிகளை மதிக்காமல், வாகனங்களில் செல்பவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். வேகமாக செல்வது, தலைக்கவசம் இல்லாமல் செல்வது, சிக்னலை மீறுவது போன்ற காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோன்று விதி மீறலில் ஈடுபடுவோர் இ-சலான் முறையில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை போக்குவரத்து போலீசார் வகுத்துள்ள முறைப்படி செலுத்தலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும் நேரில் சென்று கூட செலுத்தலாம். இந்த நிலையில், நீதிமன்றங்களுக்கு நேரில் […]
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். நாட்டில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மக்கள் ஆகிய நாம் இருக்கும் தண்ணீரை சரியாக பராமரிக்காமல் சற்று அலட்சியமாக […]
சென்னையில் 20 இளம்பெண் ஆடையின்றி நிர்வாணமாக நடந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விசாரணையில் அந்த பெண்ணுக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்று குறிப்பிட்டனர். அதைத்தொடர்ந்து வயிறு வலிக்கிறது என்று துடித்துள்ளார். அந்த பெண்ணை போலீசார் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை உள்ள ராயப்பேட்டை பகுதியில் இன்று அதிகாலை அளவில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக நடந்து […]
சேலத்தில் ராமசாமி என்ற அந்த முதியவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது. இவருக்கு பச்சமுத்து என்ற ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு ராமசாமி மகன் மருகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி கூறி அவரை பச்சமுத்து அடித்து உதைத்து துன்புறுத்தியும்,மருமகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மகன் தன்னை அடித்தும், பின்னர் முதியவரை அவரது மகள்களும் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. […]
ஒன்லி இன் இந்தோனேசியா என்ற ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பூனை ஒன்று சாலையை கடக்க முயற்சி செய்கிறது.இதனால் போக்குவரத்து போலீசார் வாகனத்தை நிறுத்தி அந்த பூனை சாலையை கடக்க உதவி செய்கிறார். இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. ஆனால் மனிதர்களாகிய நாம் மனிதர்களைத் தவிர மற்ற உயிர்களை பெரிதாக கவலைப்படுவதும் இல்லை ,அவற்றை ஒரு உயிராக மதிப்பதும் இல்லை. சாலை விபத்துகளில் மனிதன் இறப்பது செய்தியாக வருகிறது .ஒரு நாளைக்கு சாலைவிபத்துகளில் […]
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள வண்டிமேட்டுகொள்ளை என்ற கிராமத்தில் ஹரி என்ற இளைஞர் மதுபோதையில் சாலையில் வருபவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.மேலும் ஹரி மறைத்து வைத்துஇருந்த கத்தியால் 5 பேரை வெட்டியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவர்களுக்கு சிகிக்சை கொடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இவர்களை வெட்டிய ஹரியை கைது செய்ய கோரி அங்கு உள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த ஊத்துக்கோட்டை போலீசார் ஹரியை […]
சாலையில் விபத்துக்களை தடுக்க அரசும் , போக்குவரத்து காவல்துறையும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.ஆனாலும் விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் பொருத்தவரை தினமும் சாலை விபத்துக்கள் மூலமாக 405 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் நான்கு லட்சத்து 64 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்து உள்ளது. அதில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். நான்கு லட்சத்து 70,000 பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனைத்து விபத்துகளும் அதிகமாக தேசிய நெடுஞ்சாலையில் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த வெங்கடாசலத்திற்கும், அவரின் தம்பி நரசிம்மனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து உள்ளது.இதில் கோபத்தில் இருந்த வெங்கடாசலம் குமாரசாமிபேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த தம்பி நரசிம்மனை வழிமறித்து சொத்து பற்றி பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த வெங்கடாசலம் மறைத்து வைத்திருந்த கத்தியால் நரசிம்மனை குத்தினார்.தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், நரசிம்மன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நரசிம்மனுக்கு […]
மக்களவையில் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், பிரதமர் பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்டமாக 1.25 லட்சம் கிலோமீட்டர் மீட்டருக்கு 88 கோடி புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பணிகள் 2024 – 2025-ம் ஆண்டுகளில் முடியும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை அரசு தொடர்ந்து […]
நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கிராமப்புறங்களில் பொதுமக்கள் எளிதில் ஓட்டுநர் உரிமம் பெற முகாம்கள் அமைக்கப்பட்டு 300 மேற்பட்டோருக்கு ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் முத்துசுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் லெவஞ்சிரம் அருகில் சோலத்தட்டை ஏற்றி வந்த மினி லாரி மின் வயரில் உரசி தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.உடன் பொதுமக்களும் பலர் உதவினர்.