ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவதில் பாஜகவுக்கு மாற்றுக்கருத்து கிடையாது என பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாயத்தில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக நிலைப்பாடு குறித்து விளக்கமளித்தார்.
அந்த உரையில் அவர், ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவதில் பாஜகவுக்கு மாற்றுக்கருத்து கிடையாது எனவும், நீண்ட காலமாக ஜாதியை, மொழியை சொல்லி திமுக அரசியல் நடத்திவிட்டதாகவும், ஜாதி பிரச்னையை தூண்டும் வகையில் ஸ்டாலின் செயல்படுகிறார் என பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேலும் அவர், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி எனவும், பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் எனவும் கூறியுள்ளார் .