#RedAlert : நெருங்கும் நிவர் புயல்! தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்!

The Indian Meteorological Department has issued a Red Alert for Tamil Nadu and Pondicherry in the wake of Hurricane Nivar.

நிவர் புயல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, இன்று நள்ளிரவு அல்லது நாள் அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்காடுகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த புயலானது தற்போது கடலூருக்கு 180 கி.மீ, புதுச்சேரிக்கு 190 கி.மீ, சென்னைக்கு 250 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மைய ரெட் அலர்ட் விடுத்துள்ளது.