பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி தமிழகம் முழுதும் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் குணமடைய திரைப்பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
பாரதிராஜா அழைத்ததன் பேரில் திரைப்பிரபலங்கள், இசைக்கலைஞர்கள், பிரார்த்தனை செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை ஈடுபட்டுள்ளார். நடிகை சரோஜாதேவி, சிவகுமார், பார்த்திபன்மற்றும் ராதிகா உள்ளிட்டோரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.