நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி தற்கொலை – OPS இரங்கல்!

நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மதுரை மாணவிக்கு துணை முதல்வர் இரங்கல்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மதுரை மாணவிக்கு துணை முதல்வர் இரங்கல்.

மதுரையில் நீட்தேர்வு அச்சத்தால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு நடத்தப்படக்கூடிய நீட் தேர்வுக்கு பொதுமக்கள் மத்தியிலும் தமிழக அரசியல் கட்சி மத்தியிலும் எதிர்ப்பு இருந்தாலும், மத்திய அரசு நீட் தேர்வை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மதுரையில் சப்-இன்ஸ்பெக்டர் மகள் ஜோதி ஸ்ரீதுர்கா என்பவர் இன்னும் நீட் தேர்வுக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி துர்காவுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரையைச் சேர்ந்த மாணவி செல்வி.ஜோதி ஸ்ரீ துர்கா அவர்கள் இன்று காலை தற்கொலை செய்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node