கல்லூரி மாணவியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ!

இன்று பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் சாதி தான் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில், இன்று எல்லாவற்றிலும் சாதி என்பது உயிர் மூச்சாக மாறியுள்ள நிலையில்,

இன்று பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் சாதி தான் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில், இன்று எல்லாவற்றிலும் சாதி என்பது உயிர் மூச்சாக மாறியுள்ள நிலையில், சிலர் சாதி என்னும் சாக்கடையில் உலராமல், மாற்று சாதி பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், அப்படி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இன்று பாதுகாப்பு என்பது இல்லை.

வேற்று சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு, அவர்களது பெற்றோரே எமனாக மாறி விடுகின்றனர்.  இந்நிலையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில், கல்லூரி மாணவியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.  இவருக்கு அதிமுக நிர்வாகிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.