சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தொலைபேசி மூலம் பேசி வருகின்றனர். சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் நீதிபதிகள் பேசியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்டு நடவடிக்கை தமிழக காவல் துறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தி உள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.