இன்று முதல் யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் -ரிசர்வ் வங்கி ஆளுநர்

Default Image

இன்று முதல்  யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும்  என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். 

வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது.பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்தது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியது. இதையடுத்து யெஸ் வங்கியின் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டும் முயற்சியில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஈடுபட்டன. அந்த வகையில் பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடியை முதலீடு செய்ய ஒப்புதல் பெற்றது. 

இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் யெஸ் வங்கி கட்டுப்பாடுகள் நீங்குவதாக தெரிவித்தார்.மேலும்  இன்று முதல்  யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும்  என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்