போதைக்கு அடிமையாகிய கணவனின் தொல்லை தங்க முடியாமல் பெண் தற்கொலை...!

In Uttar Pradesh, a 40-year-old woman has committed suicide after being harassed by her husband.

உத்தர பிரதேசத்தில் கணவரின் தொல்லை தங்க முடியாமல் 40 வயது பெண் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள ஷாம்லி எனும் மாவட்டத்தில் கர்ஹி புக்தா பகுதியில் உள்ள பைன்ஸ்வால் கிராமத்தில் வசித்து வரக்கூடிய அஞ்சு எனும் பெண்மணியின் கணவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனால் அஞ்சு மனமுடைந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் அறிந்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அஞ்சு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதமாக உயிரிழந்துள்ளார். தற்பொழுது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனின் தொல்லை தாங்காமல் பெண் தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.