டெல்லியில் உள்ள பாரதியார் சிலையின் கைத்தடியை எடுத்து சென்றது யார்?

Delhi Subramaniam will be on Mark Road, causing a stir as the cane in the statue of Bhartiyar has gone missing.

டெல்லி சுப்பிரணியன் மார்க் சாலையில் இருக்கும், பாரதியாரின் சிலையில் உள்ள கைத்தடி காணாமல் போனதால் பரபரப்பு.

இன்று நாடு முழுவதும் பாரதியாரின் 139-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இன்று பல கட்சி தலைவர்களும் இவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லி சுப்பிரணியன் மார்க் சாலையில் இருக்கும், பாரதியாரின் சிலைக்கும் தலைவர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.

ஆனால், பாரதியாரின் சிலையில் கைத்தடி காணாமல் போயுள்ளது குறித்து எந்த தலைவர்களும் கவனிக்கவில்லை. மேலும், இதுகுறித்து அந்த சிலையை சுற்றி தூய்மைப்படுத்தக் கூடியவர்களிடம் கேட்ட போது, அந்த கைக்கம்பு சில வாரங்களாகவே காணாமல் போயுள்ளது. அதுகுறித்து யாரும் பதில் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள் யாரும் இதை கண்டு கொள்ளாத நிலையில், சமுகம் விரோதிகள் யாரும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் இது சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.