வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணி – பிரதமர் மோடி பாராட்டு

We are all overjoyed at the success of the Indian Cricket Team in Australia - Prime Minister of India Narendra Modi

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் ,டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி ,ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய  அணியின் வெற்றியைக் கண்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். வீரர்களின் குறிப்பிடத்தக்க ஆற்றலும், ஆர்வமும் முழுவதும் தெரிந்துள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் வருங்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

unknown node