எம்மாடியோ! வாட்ச் 55 கோடி…214 கோடி உடை…மிரள வைத்த அனந்த் அம்பானி!!

Anant Ambani Rs 200 crore wedding sherwani

ஆனந்த் அம்பானி : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் பிரமாண்டமாக (ஜூலை 12)மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு உலகெங்கிலும் உள்ள பல தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே, இவர்களுடைய திருமணம் செலவு பற்றிய தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் கொடுத்த தகவலின் படி, ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிர்க்கும் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு மொத்தமாக ரூ. 4,000 கோடி முதல் 5,000 கோடி வரை ($0.6 பில்லியன்) செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அதனை தொடர்ந்து அடுத்ததாக,திருமணத்திற்கு ஆனந்த் அணிந்த ஷெர்வாணி, தலைப்பா, வாட்ச் ஆகியவற்றின் விலை குறித்த தகவலும் வெளியாகி பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by ETimes (@etimes)


அதன்படி, கிட்டத்தட்ட ஆனந்த் அணிந்த ஷெர்வாணி விலை 214 கோடி இருக்குமாம். ஷெர்வாணியில் யானையின் வடிவில் உள்ள புரூச்சின் 14 கோடியும் தலைப்பாவின் 160 கோடி ரூபாயும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அத்துடன் கையில் அவர் அணிந்திருக்கும் பெரிய வாட்ச் விலை 55 கோடி எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் பலரும் எம்மாடி இப்போவே கண்ணகட்டுது என கூறி வருகிறார்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்