மோடி அரசுக்கு எதிராக, பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு யானை அளவுக்கு அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
unknown nodeஇதனை சுட்டிக்காட்டி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த யானை அளவு விலை உயர்வு என்ற பதாகைகளை அணிவித்து யானையை ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக அழைத்துச் சென்றனர்.
காங்கிரஸ் கட்சியினரின் இந்த நூதனப் போராட்டத்திற்கு குழந்தைகளின் ஆதரவு அதிகமாக இருந்தது.