#BreakingNews : குடியரசு தினத்தன்று செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்

Tractor rally: a group of farmers reach Red Fort and Farmers have occupied the space right outside Red Fort.

டெல்லியில் உள்ள செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாய அமைப்புகள் 60-நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். டெல்லியை சுற்றி சுமார் 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர்.மத்திய டெல்லியை நோக்கி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் டெல்லி சஞ்சய் காந்தி நகரில் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற வாகனங்கள் செங்கோட்டையில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.