திருப்பூரில் ஏற்பட்ட விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி கேரள மாநில அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது கோவையிலிருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும் – பேருந்தும் மோதிக்கொண்டது.இந்த கோர விபத்தில் 20 பேர் இடத்திலே உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
unknown node