புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி!!1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியது இந்தியா !!
- ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை.
கடந்த 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை . 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது .அதிகாலை 3.30 மணிக்கு இந்த அதிரடி தாக்குதலை இந்திய விமானப்படை நடத்தியதாக தகவல் தெரிவித்துள்ளது.இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் அமெரிக்கா,ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
அதேபோல் புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரம் இருந்தால் பாகிஸ்தான் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்.மேலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் யோசித்துக்கொண்டு இருக்காமல் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
.