ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது ? பிற்பகலில் முடிவு

The team of doctors will evaluate him this afternoon and take a decision on Rajinikanth discharge -Hospital

நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து பிற்பகலில் முடிவு எடுக்கப்படும் என்று  அப்போலோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவுமில்லை எனவும், ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆகவே ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில்  அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து இன்று பிற்பகலில் முடிவு செய்ய உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மருத்துவ பரிசோதனை முடிவுகளில் ரஜினி உடல்நலம் குறித்து அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.