கடலில் விழுந்த இந்திய கடற்படையின் MIG 29K பயிற்சி விமானம் விமானி ஒருவர் மாயம்

The search for another pilot has been intensified after the Indian Navy's MIG 29K training plane crashed into the sea last Thursday.

கடந்த வியாழக்கிழமை இந்திய கடற்படையின் MIG 29K எனும் பயிற்சி விமானம் கடலில் விழுந்ததில், விமானி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்,  மற்றொரு விமானியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் MIG 29K எனும் பயிற்சி விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுத கடந்த வியாழக்கிழமை இரவு கடலில் விழுந்துள்ளது. அப்பொழுது விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் கடலில் விழுந்து மூழ்கியுள்ளனர். அதில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் மற்றொரு விமானி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இந்திய கடற்படை, கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் தன் இந்த விபத்து நடந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு விமானியை மேற்பரப்பு அலகுகள் மூலம் தேடி வருவதாக இந்திய கடற்படை தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக இந்திய கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.