Tag: pilot

விமான விபத்திலிருந்து உயிர் தப்பிய பைலட்..!

மத்தியப்பிரதேச பயிற்சி விமான விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் விமானி. சிம்ஸ் விமான பயிற்சி மையம் சாகர் நகரின் தானா பகுதியில் அமைந்துள்ளது.  இன்று பிற்பகல் இந்த நிறுவனத்தில் உள்ள சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விமானத்தை பயிற்சி விமானி ஓட்டி சென்றுள்ளார். இந்த விமானத்தை தரையிறக்கும் வேளையில் ஓடுபாதையிலிருந்து விலகி சென்றுள்ளது. அருகில் இருக்கும் தரையில் விமானம் சென்று மோதியுள்ளது. விபத்துக்குள்ளான இந்த விமானத்திலிருந்து பயிற்சி விமானி அதிர்ஷ்டவசமாக உயிரோடு தப்பித்துள்ளார். […]

#Madhya Pradesh 2 Min Read
Default Image

இப்படி ஒரு திறமையா? 7 வயதில் பைலட்டான சிறுவன்!

கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார். உகாண்டா தலைநகரம் கம்பாலாவின் புறநகரில் கிரஹாம் ஷேமா என்னும் ஏழு வயது சிறுவன் வசித்து வருகிறான். இவர் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். இவரது வியக்கவைக்கும் விமான அறிவு மற்றும் விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் […]

kiraham shema 7 Min Read
Default Image

கடலில் விழுந்த இந்திய கடற்படையின் MIG 29K பயிற்சி விமானம் விமானி ஒருவர் மாயம்

கடந்த வியாழக்கிழமை இந்திய கடற்படையின் MIG 29K எனும் பயிற்சி விமானம் கடலில் விழுந்ததில், விமானி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்,  மற்றொரு விமானியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் MIG 29K எனும் பயிற்சி விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுத கடந்த வியாழக்கிழமை இரவு கடலில் விழுந்துள்ளது. அப்பொழுது விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் கடலில் விழுந்து மூழ்கியுள்ளனர். அதில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் மற்றொரு விமானி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இது குறித்து […]

MIG 29K 3 Min Read
Default Image

குழந்தை பெற இயலாத பெண்! கணவரால் துன்புறுத்தப்பட்ட நிலையில் தூக்குபோட்டு தற்கொலை!

கணவரால் துன்புறுத்தப்பட்ட நிலையில் தூக்குபோட்டு தற்கொலை. ஹைதராபாத் நகரின் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத்தின் ரல்லாகுவாவில் வசித்து வருபவர் லாவண்யா. இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ்வர் ராவ் என்ற பைலட்டை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குழந்தை இல்லாத காரணத்தால், லாவண்யாவின் மாமியார் மற்றும் கணவரால் துன்புறுத்தப்பட்டார். கணவரின் துன்புறுத்தலை தாங்க இயலாமல், லாவண்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து, இவரது குடும்பத்தினர்   சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டனர். அந்த காட்சியில், வெங்கடேஸ்வர […]

#suicide 3 Min Read
Default Image

#BREAKING: தமிழக விமானி உள்பட 2 பேர் பலி.!

ஒடிஷா மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழக விமானி உட்பட 2 உயிரிழப்பு. ஒடிஷா மாநிலத்தில் உள்ள தெங்கனல் மாவட்டத்தில் கங்கடஹாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரசால் ஏர்ஸ்ட்ரிப்பில் இன்று ஒரு பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பீகாரைச் சேர்ந்த கேப்டன் சஞ்சிப் குமார் ஜா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயிற்சி விமானியான அனிஸ் பாத்திமா ஆகிய இருவரும் உயிர் இழந்தனர். இவர்களின்  உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன விபத்துக்குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#Death 2 Min Read
Default Image

நடுவானில் தீ.!சாதுரியமாக செயல்பட்ட விமானியால் 278 பயணிகள் தப்பினர்.!

புகுயோகா நகரில் இருந்து  புறப்பட்டு சென்ற  விமானம் ஒரு மணி நேரத்திற்கு  பின் நடுவானில் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது. விமானி சாதுரியமாக செயல்பட்டு மீண்டும் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். ஜப்பானின் புகுயோகா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து “ஆல் நிப்பான் ஏர்வேஸ்” நிறுவனத்துக்கு சொந்தமான “போயிங் 767” ரக விமானம் ஓன்று  தலைநகர் டோக்கியோவிற்கு  புறப்பட்டு சென்றது. இந்த  விமானத்தில் மொத்தமாக 278 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு சென்ற ஒரு […]

278 passengers 3 Min Read
Default Image

விமான கழிவறையில் கேமரா வைத்து லைவாக பார்த்த விமானி..!

அமெரிக்காவின் சௌத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பிட்ஸ்பெர்கில் இருந்து பொனிக்ஸ் நோக்கி புறப்பட்டது. விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இரண்டு விமானிகளில் ஒருவர் கழிவறைக்கு சென்றார். ஒரு விமானி இல்லாத நிலையில், உதவிக்காக விமானத்தில் பணிபுரிந்த ரெனி என்ற பணிப்பெண், காக்பிட்க்குள் சென்றார். அப்பொழுது கட்டுப்பாட்டு அறையில் இருந்த மற்றொரு விமானி கழிப்பறையில் நடக்கும் காட்சிகளை லைவாக பார்த்துக் கொண்டிருந்தார். அந்த பெண்ணை பார்த்து […]

camera 4 Min Read
Default Image

பாகிஸ்தானில் பரிதாபம் : விமானி உட்பட 17 பேர் பலி !

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இராணுவ  தலைமையகம் உள்ளது. அதன் அருகே நேற்று முன்தினம்  காலை சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மொராகலூ கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் அந்த சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் , 3 ராணுவ வீரர்கள் என  17 பேர் இறந்தனர். மேலும் 6 வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் காயமடைந்த 12 பேரும் அருகில் உள்ள […]

#Pakistan 3 Min Read
Default Image

தவறான பொத்தானை அழுத்தியதால் விமானிக்கு மூன்று மாதம் சஸ்பெண்ட்!

கடந்த 8-ம்  தேதி டெல்லியில் இருந்து காஷ்மீரில்  உள்ள ஸ்ரீநகருக்கு  ஏர் ஏசியா விமானம் ஓன்று  புறப்பட்டு சென்றது. அப்போது அந்த விமானம் சென்று கொண்டு இருந்த போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது .இந்நிலையில் உடனடியாக  தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு  விமானி தகவல் கொடுக்க முயற்சி செய்தார். என்ஜினில் கோளாறு என்றால்  7700 என்ற சமிஞ்சை கோடை  அழுத்த வேண்டும். ஆனால் விமானி விமானம் கடத்தப்பட்டதாக கூறும் 75,000 கோடை  தவறுதலாக அழித்து விட்டார். இதனால் காஷ்மீருக்கு […]

air asia 3 Min Read
Default Image

போர் விமானம் விழுந்து நொறுங்கியது…..விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்தின்  பொக்ரான் பகுதியில் இந்திய ராணுவ விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 என்ற ரக போர் விமானத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. யாருமே எதிர்பார்க்காமல் நடைபெற்ற இந்த விபத்தில், விமானத்தில் பயணித்துக்கொண்டு இருந்த விமானி பாராசூட்_டை வைத்துக்  குதித்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தார். இது தொடர்பாக அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#Rajasthan 2 Min Read
Default Image