சிறுத்தையை சாதூரியமாக விரட்டியடித்த மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மூதாட்டி ஒருவர் தனது வீட்டின் வெளியே திண்ணையில் முன்பு அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் மறைந்திருந்த சிறுத்தை திடீரென மூதாட்டியை தாக்க முயன்றுள்ளது. இதனையடுத்து, கீழே விழுந்த மூதாட்டி தனது ஊன்றுகோலை பயன்படுத்தி இரண்டு முறை சிறுத்தை அடித்து விரட்ட முற்பட்டுள்ளார்.
இதனை எடுத்த மூதாட்டி ஊன்றுகோலை வைத்து சிறுத்தையை அடித்தபின் அப்பகுதியை விட்டு சிறுத்தை வெளியேறியது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் வெளியே வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node