உருமாறிய கொரோனாவால் நிறுத்தப்பட்ட சேவை ! நாளை மீண்டும் தொடங்குகிறது

The mutated corona virus has been re-launched from tomorrow, during flights from India to Britain suspended.

உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில்,நாளை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது

பின்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி அதாவது நாளை முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் 8 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்போது வரை இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.