பெற்ற மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்! உ.பி.யில் நடந்த அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசம் : பிஜ்னோரை சேர்ந்த மனநலம் சரியில்லாத பெண் ஒருவர் தனது 4 வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் சரியில்லாத ஆதேஷ் தேவி தனது குழந்தையை கொலை செய்த பிறகு வீட்டிற்குள் இருந்த அடுப்பில் உடலை எரிக்கவும் முயற்சி செய்து இருக்கிறார்.
தேவியின் கணவர் கபில் குமார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக உதவிக்கு குடும்ப உறுப்பினர்களை அழைத்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் வந்ததும், தேவி தனது கையில் மண்வெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் தனது கணவர் குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்களை வர விடாமல் விரட்டினார்.
இதனையடுத்து, குமார் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்தார். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவி மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணை செய்த போது பல கேள்விகள் கேட்டும் தேவி அமைதியாக இருந்தார். அதன் பிறகு அவருடைய சகோதரர் தேவி “மனநிலை சரியில்லாதவர்” என்று காவல்துறைக்கு தகவலை தெரிவித்தார். இருப்பினும், விசாரணை இன்னும் நடந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025