நோயாளி வயிற்றில் குத்திய மருத்துவ ஊழியர்..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ …!
மும்பை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை மருத்துவமனை ஊழியர் ஒருவர் தாக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. விரக்தியடைந்த மருத்துவமனை ஊழியர் வயதான நோயாளியின் வயிற்றில் தனது முழங்கையால் அடிப்பது மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
புதன்கிழமை (ஜூன் 19) இந்த சம்பவம் நடந்ததைக் காட்டும் சிசிடிவி காட்சிகளுடன், திங்களன்று இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது. சம்பவத்தின் சரியான இடம் எது என்பது பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் வீடியோ மிகவும் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
நோயாளிக்கு எதிராக கொடூரமான செயலைச் செய்த நபர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. இருப்பினும், அவரது மனிதாபிமானமற்ற இந்த அதிர்ச்சியான செய்யலை வீடியோவில் பார்த்த பலரும் ” ஒரு உடல் நலம் சரியில்லாதவரை இப்படியா தாக்குவது? எனவும் கண்டிப்பாக தாக்கிய அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறி வருகிறார்கள். நோயாளியை தாக்கிவிட்டு யாராவது பார்த்துவிட்டார்களோ என்று சுற்று பார்த்துவிட்டு பின் கேமரா இருப்பதை கவனித்த அவர் வேகமாக தப்பி ஓடினார்.
लोग डॉक्टर को भगवान का दर्जा दिए है
परंतु यहाँ डॉक्टर- शैतान का रूप में है देखिए 😳😳 pic.twitter.com/y8BrEj386x
— Prof. Sudhanshu Trivedi (@Sudanshutrivedi) June 24, 2024