மனைவி துரோகம் செய்ததாக கூறி தலையை வெட்டிக்கொண்டு காவல் நிலையம் சென்ற கணவர்!
உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி துரோகம் செய்ததாக கூறி தலையை வெட்டிக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார் கணவர்.
தற்போதைய காலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைத்து குற்றங்களும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே எழக்கூடிய பிரச்சினைகள் சுமூகமாக முடிய கூடிய காலம் தற்போது கிடையவே கிடையாது. ஒன்று கொலை அல்லது விவாகரத்து, ஏதாவது ஒன்றில்தான் கணவன் மனைவி பிரச்சனைகள் முடிகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள பாந்தா எனும் மாவட்டத்தில் சின்னார் யாதவ் என்பவர் தனது மனைவி விமலா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே கோபத்தில் தனது மனைவி விமலா தலையை துண்டித்து உள்ளார். மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறி சண்டையிட்ட யாதவ் அதன்பின் மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்து சென்று நடந்தவற்றைக் கூறி சரணடைந்துள்ளார்.