சோதனை முயற்சிகளில் சில நேரம் வெற்றிகளை குவிக்க முடியாது-கூட்டணி முறிவு குறித்து அகிலேஷ் விளக்கம்
உத்திரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்தித்தது.ஆனால் எதிர்பார்த்த வெற்றி இந்த கூட்டணிக்கு கிடைக்கவில்லை.
இன்று இதற்கு ஏற்ற வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில், உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்தார்.
பின் மாயாவதி அறிவிப்பு தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.அப்போது அவர் கூறுகையில்,கூட்டணி முறிந்தது வருத்தம் அளிக்கிறது .மேலும் வரும் 11 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், சோதனை முயற்சிகளில் சில நேரம் வெற்றிகளை குவிக்க முடியாது .அதே நேரத்தில் பலவீனத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் தனித்துப் போட்டியிடலாம் .அரசியல் களம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.