பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 327 புள்ளிகள் உயர்ந்து 61,167 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,197 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
2023 ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 327 புள்ளிகள் அல்லது 0.54% என உயர்ந்து 61,167 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 92 புள்ளிகள் அல்லது 0.51% உயர்ந்து 18,197 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,840 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,105 ஆகவும் நிறைவடைந்தது.