கேரளா சென்ற ராகுல்காந்தியை சந்தித்த ராஜம்மாள்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தன் நாடாளுமன்ற தொகுதி வயநாட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 2 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அதன்படி நேற்று, மலப்புரத்தில் உள்ள காந்தி பவன் முதியோர் இல்லத்தில் ராகுல் காந்தி அங்கிருக்கும் முதியோர்களுடன் மதிய உணவை அருந்தினார். இந்நிலையில், இன்று ராகுல்காந்தியை, அவர் பிறந்தபோது செவிலியராக பணியாற்றிய ராஜம்மாள் பார்க்க சென்றார்.
அப்போது, ‘ ராகுல் காந்தி தனது மகன்’ என்றும், அவர் பிறந்த போது நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார். இதையடுத்து, ராஜம்மாள் ராகுல் காந்திக்கு சாக்லேட் கொடுத்தார். அப்போது, இது தாய்க்கும், மகனுக்குமான உறவு. எனவே அவருக்கு சாக்லேட் கொடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என கூறியுள்ளார்.