மாணவர்களை சாதிப்பிரிவை குறிப்பிட்டு தகாத வார்த்தையால் திட்டிய பேராசிரியர்…!

மாணவர்களை சாதிப்பிரிவை குறிப்பிட்டு தகாத வார்த்தையால் திட்டிய பேராசிரியர்.
கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில், பட்டியல் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரு வருட சிறப்பு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகிறது. அவ்வாறு ஆன்லைன் வகுப்பு நடத்திய மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் சீமா அவர்கள் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களை வெட்கம்மற்றவர்கள் என்று தகாத வார்த்தையால் சாதிப் பிரிவை குறிப்பிட்டு திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேசிய கீதத்துக்கு மாணவர்கள் எழுந்து நிற்காத காரணத்தினால் ஆசிரியர் சீமா இவ்வாறு திட்டியதாக கூறப்படுகிறது. ஆசிரியர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இந்த வீடியோ அந்த தொழில்நுட்ப கழக இயக்குனர் பார்வைக்கு சென்றுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் பேராசிரியர் அழைத்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. எங்கள் கல்விக்கூடத்தில் இதுபோன்று நடத்தைகளுக்கு இடமில்லை. இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
These are the videos pic.twitter.com/Gtyd1hQMQP
— APPSC IIT Bombay (@AppscIITb) April 26, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025