கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் மோடியின் தாயார்...! பிரதமர் மோடி ட்வீட்...!

பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென் (99), இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.

பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென் (99), இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, கடந்த ஜன.16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில், மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென் (99), இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார். இதுகுறித்து, பிரதமர் மோடி தான் ட்வீட்டர் பக்கத்தில், எனது தாயார் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக் கொண்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

unknown node