இன்று ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Prime Minister Narendra Modi lays the foundation stone for the AIIMS Hospital in Rajkot, Gujarat, at 11 a.m. today.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல்  நாட்டுகிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய துணை சுகாதாரத்துறை அமைச்சர் அர்வின் சௌபே ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொள்கின்றனர். ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்காக 201 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.