மிகுந்த அங்கீகாரம் பெற்ற உலகத்தலைவர்களில் முதலிடம் பெற்ற பிரதமர் மோடி!

Prime Minister Modi is one of the most recognized world leaders.

மிகுந்த அங்கீகாரம் பெற்ற உலகத்தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் மிகுந்த அங்கீகாரம் பெற்ற உலக தலைவர்கள் குறித்த ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உலக தலைவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதலிடம் பிடித்துள்ளார். 70% வாக்கு பெற்று நரேந்திர மோடி அவர்கள் உலகத் தலைவர்களில் மிகுந்த அங்கீகாரம் பெற்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாவது இடத்தில் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆபரேட்டர் அவர்களும் மூன்றாவது இடத்தில் இத்தாலி பிரதமர் மரியா டிராகி அவர்களும் உள்ளார். மேலும் பிரதமர் மோடியை பொருத்தவரை அவருக்கு 24 சதவீதம் மட்டுமே நிராகரிப்பு உள்ளதாகவும், 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் அவரை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.