மருத்துவர்கள் முன்னிலையில் பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் மோடி உரை..!

— Narendra Modi (@narendramodi) July 1, 2021

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று பிற்பகல் 3 மணியளவில் மருத்துவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

தேசிய மருத்துவர்கள் தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் மேற்கு வங்க இரண்டாம் முதல்வர் பிதான் சந்திர ராயின். இவர் ஜூலை 1, 1882 ஆம் ஆண்டில் பிறந்தார். மருத்துவ துறையில் பல்வேறு சேவைகளை செய்துள்ளதால் இவரது நினைவாக இவரின் பிறந்த தினத்தை தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய மருத்துவர்கள் தினமான இன்று பலரும் மருத்துவர்களை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘மருத்துவர்கள் தினத்தன்று, அனைத்து மருத்துவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். மருத்துவத்துறையில் இந்தியாவின் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை. மேலும், இவர்கள் நமது பூமியை ஆரோக்கியமாக மாற்ற பங்காளித்துள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்று தேசிய மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மருத்துவர்கள் முன்னிலையில் பிற்பகல் 3 மணிக்கு உரையாற்றுகிறார்.

unknown node