புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உடனடி அமல் ....!

In Puducherry, petrol price has been reduced by 12.85 paise and diesel by 19 rupees.

புதுச்சேரியில் பெட்ரோல் விலை 12.85 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  டீசல் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான கலால் வரியை குறைத்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் கலால் வரி குறைப்பில் இருந்து கூடுதலாக 7 ரூபாய் வாட் வரியை புதுச்சேரி அரசு குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை 12.85 காசுகள் குறைந்து 94.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல டீசல் விலையில் 19 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.83.58 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் கலால் வரிக்குறைப்புடன், தீபாவளி பரிசாக புதுச்சேரி மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மேலும் குறைத்துள்ளது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.