தாக்க முற்பட்ட பாகிஸ்தான்…சுட்டு வீழ்த்தியது இந்தியா…!!

Default Image
  • புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது.
  • இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் இந்தியாவின் தாக்குதலில் தரை மட்டமாக்கப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.ஆனால் இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றது.மேலும் தற்போது மத்திய அரசு இந்தியா பயங்கரவாதிகள் முகாம் மீது சக்திவாய்ந்த 6 குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.இந்நிலையில் இன்று பாகிஸ்தான் ராணுவம் F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்தது இதை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்