டெல்லி டிராக்டர் பேரணி ! போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழப்பு!

One person died after a tractor overturned at Delhi's DDU Marg on during the violent protest in the borders and several parts

விவசாயிகள் நடத்திய  போராட்டத்தின் போது டெல்லியின் டிடியு மார்க்கில் உள்ள பகுதியில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

விவசாயிகள் 62-வது நாளான இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர்.அப்போது ஒரு சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதாகவும்,அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.இதன்  காரணமாக, கிழக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியில் இருந்து மத்திய டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் தான் டெல்லியின் டிடியு மார்க் பகுதியில்  போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source :India Today