கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் எண்ணிக்கை!

In India, 45,951 people have been newly infected with corona in the last 24 hours. The death toll has risen to 817, bringing the total number of casualties so far to 3,03,62,848.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 817 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,03,62,848 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 8 ஆயிரம் அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,03,62,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 817 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,98,454 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 60,729 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,94,27,330 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,37,064 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை33,28,54,527பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.