மே-1ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு தடுப்பூசி போட இயலாது – டெல்லி முதல்வர்

Delhi Chief Minister Arvind Kejriwal has said that on May 1, people over the age of 18 could not be vaccinated due to lack of adequate vaccinations.

போதுமான அளவு தடுப்பூசி இல்லாத காரணத்தால், மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட இயலாது நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்குமாநிலத்தில் பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பி வழிக்கிறது. மேலும், தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் தட்டுப்பாடு அங்கு  காணப்படுகிறது. இதனையடுத்து அங்கு நிலைமை மோசமாவதை தடுக்க டெல்லி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் அங்கு போதுமான அளவு தடுப்பூசி இல்லாத காரணத்தால், மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட இயலாது நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு கிடைக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்றும், அடுத்த மூன்று மாதங்களில் தலா 67 லட்சம் கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு தடுப்பூசிகள் கிடைக்க ஆம் ஆத்மி அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும், தடுப்பூசிகள் இன்னும் வந்து சேரவில்லை. நாங்கள் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். மேலும் தடுப்பூசிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் இங்குவந்து சேரும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் மே 1-ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த அவர் போதுமான தடுப்பூசி இல்லாத காரணத்தால், தடுப்பூசி போடும் அளவிற்கு போதுமான தடுப்பூசிகள் இல்லை. தடுப்பூசி வந்தபின் தடுப்பூசி போடுவதற்கான தேதி அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.