ஸ்மிருதி ராணியின் காலனி விலை கேட்ட நெட்டிசன்கள்! அதற்கு ஸ்மிருதி என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா?

Smriti Rani posted a photo of herself sitting outside her garden in the morning while attending a meeting on her website.

ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் போது, தனது தோட்டத்தின் வெளியில் காலையில் அமர்ந்திருந்து அந்தக் கூட்டத்தில் கலந்தவாறு எடுத்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்ட ஸ்மிருதி ராணி.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது இணையப்பக்கத்தில் நகைச்சுவையான பதிவுகளை பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் அவரது பதிவுகளில் யாராவது கருத்துக்களை பதிவிட, அதற்கும் அவர் பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மடிக்கணினியில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் போது, தனது தோட்டத்தின் வெளியில் காலையில் அமர்ந்திருந்து அந்தக் கூட்டத்தில் கலந்தவாறு எடுத்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவுடன் அவரிடம் ஒருவர், அவரது செருப்பை சுட்டிக்காட்டி ‘ஹவாய் செப்பல் ஒப்’ என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அவர் “ஆர்ரே பாய் ஹவாய் சப்பல் ஹை 200 ரூபாய் வாலி .. ஆப் பிராண்ட் நா புச்சோ .. லோக்கல் ஹை (இது ரூ .200 க்கு ஹவாய் சப்பல். இப்போது உள்ளூர் என்பதால் பிராண்டை என்னிடம் கேட்க வேண்டாம்).” என தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்மிருதி ராணியின் காலனி விலை கேட்ட நெட்டிசன்கள்! அதற்கு ஸ்மிருதி என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா?