புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வரும்10-ம் தேதி மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 10 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் விழாவை நடைபெறும் என அறிவித்தார். புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75-வது நிறைவடைந்ததும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளின் அமர்வும் தொடங்குவோம் என ஓம் பிர்லா தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்க்கான செலவு ரூ.971 கோடி எனவும் புதிய நாடாளுமன்றம் ஒரு முக்கோண வடிவத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளின் போது காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், இது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனி அலுவலகங்களைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களுக்கு அமரக்கூடிய வசதியும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்கள் அமரக்கூடிய வசதியும் இருக்கும். எதிர்காலத்தில் இரு வீடுகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை மனதில் கொண்டு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025