வைரல் வீடியோ:வானில் தெரிந்த அரிய நிகழ்வு – எங்கு தெரியுமா?.!

மகாராஷ்டிரா: நாக்பூர் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் வானத்தில் விண்கல் தெரிந்ததாக தகவல்.

மகாராஷ்டிரா: நாக்பூர் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் வானத்தில் விண்கல் தெரிந்ததாக தகவல்.

மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா, பர்வானி மாவட்டங்களில் மக்கள் நேற்று(சனிக்கிழமையன்று) ஒரு தனித்துவமான வான நிகழ்வை நேரில் கண்டுள்ளனர்.நேற்று மாலை 7.30 முதல் 8.45 வரை வானில் பலத்த வெளிச்சத்துடன் கீழே விழுந்த விண்கல் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

வைரல் வீடியோ:

இந்த விண்கல் விழுந்த அரிய நிகழ்வை மக்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.குறிப்பாக,இந்தோரின் பிஜல்பூர், கந்த்வா மற்றும் கர்கோன் ஆகிய இடங்களில் இந்த காட்சி தெளிவாகக் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

unknown node

விமானத்தின் துண்டுகளா?:

இதனிடையே,வானத்தில் தெரிந்த காட்சி செயற்கைக்கோள் அல்லது விமானத்தின் துண்டுகளாக இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இருப்பினும்,வானத்தில் இருந்து அவை விழுந்த இடத்தையும்,அவை என்ன என்பது குறித்தும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.