மத்திய பிரதேச பேருந்து விபத்து ! 38 பேர் உயிரிழப்பு

Madhya Pradesh Bus Accident: 38 Killed

மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி என்ற பகுதியில் இருந்து சட்னா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 54 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஓட்டுநர் கட்டுப்பாட்டை பேருந்து இழந்த நிலையில் சித்தி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்துள்ளது.செய்தி அறிந்ததும் கிராம மக்கள், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,பேருந்தில் பயணித்த 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.