மனிதர்கள் மீது மிதித்து ஓடும் மாடுகள்.. ம.பி.யில் வித்தியாசமான தீபாவளி கொண்டாட்டம்.!

Next day DIwali Celebration - Madhya Pradesh

நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு புராண கதைகள் வழியாக தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டாலும் , அனைத்து கதைகளும் ஒரே நாளில் அமைந்து இருப்பது ஆச்சர்யமான உண்மை. 5 நாள் திருவிழவாக வெவ்வேறு மத சடங்குகள் உடன் வடமாநிலங்கள் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழா ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி மறுநாளான இன்று மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் மாடுகளை தங்கள் மீது ஓட வைத்து வித்தியாசமான முறையில் … Read more

சத்தீஸ்கரில் சூதாட்டம்.. ராஜஸ்தானில் சிவப்பு டைரி.! காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றசாட்டு.!

PMModi in MP

இந்த ஆண்டு நடைபெறுகிற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், முதல் கட்டமாக மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் 70.87% வாக்குகள் பதிவானது. அதேபோல, மிசோரம் மாநிலத்தில் 75.88% வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. இதே நாளில் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், … Read more

அரசுப் பள்ளிகளுக்கு தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரார்கள் பெயர் – மாநில அரசு அதிரடி

இந்தூரில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர் சூட்ட அரசு திட்டம். இந்தூர் அம்பேத்கர் நகரில் உள்ள 234 அரசுப் பள்ளிகளுக்கும் தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை சூட்ட மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கைக் கதைகளும் பள்ளிகளில் … Read more

நமீபியாவிலிருந்து வந்த சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவித்த பிரதமர் மோடி

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சீட்டா வகை 8 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார் பிரதமர் மோடி. இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து வரவழைக்கப்படுவதாக மத்தியபிரதேச தலைமை வனப்பாதுகாவலர் ஜே.எஸ்.சௌஹான் தெரிவித்திருந்தார். அந்த 8 சிறுத்தைகள் இன்று காலை கார்கோ விமானம் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியருக்கு வந்தடைந்தது. சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் அவை சியோப்பூர் மாவட்டத்தில் உள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவிற்கு வரவழைக்கப்பட்டது. … Read more

இது நடந்தால் டிக்கெட் விலை 30% குறையும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு மாறினால் டிக்கெட் விலை 30% குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு. ரூ.2,300 கோடி மதிப்பிலான ஐந்து வழி சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பொதுப் போக்குவரத்து அமைப்பில் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாநில போக்குவரத்து கழகங்கள், மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு … Read more

#BREAKING: மருத்துவமனையில் தீ விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தீ பற்றி, மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தீயை … Read more

அடி தூள்.! தேசிய விருதை தட்டி சென்ற இசை அசுரன் ஜிவி.! குவியும் வாழ்த்துக்கள்….

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் … Read more

#NationalFilmAwards: திரைப்படங்களுக்கு உகந்த மாநிலம் அறிவிப்பு!

திரைப்பட தயாரிப்புக்கு மிகவும் உகந்த மாநிலமாக மத்திய பிரதேச தேர்வு என அறிவிப்பு. டெல்லியில் 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதி பெற்றவை. தேசிய திரைப்பட விருதுகளுக்கு 305 கதைப்படங்களும், 140 ஆவணப்படங்களும் … Read more

#JustNow: ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு என தகவல். மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்னர். மத்திய பிரதேஷ மாநிலம் இந்தோரிலிருந்து புனே நோக்கி சென்ற பேருந்து தார் மாவட்டம் கல்காட் சஞ்சய் என்ற பகுதியில் உள்ள பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச அமைச்சர் … Read more

#ViralVideo:”உன் பெயர் முகமதுவா?”-மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அடித்தே கொன்ற பாஜக நிர்வாகி?..!

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் இசுலாமியர் என நினைத்து ஜெயின் மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை பாஜக நிர்வாகி கடுமையாக தாக்கியதில் முதியவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தின் சிர்சா கிராமத்தில் வசிக்கும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பவர்லால் ஜெயின் என்ற 65 வயது முதியவர்,ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பதாருடன் சென்றிந்த நிலையில்,வழி தவறி காணாமல் போய்விட்டார்.இதனையடுத்து,அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் … Read more