மக்களவை தேர்தல் 2019: 9 மணி நிலவரப்படி 11 % வாக்குகள் பதிவு
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதற்கட்ட தேர்தலில் 9 மணி நிலவரப்படி 11 % வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தெலங்கானா- 10.6%
- அந்தமான் மற்றும் நிகோபார்- 5.83%
- அஸ்ஸாம்: 10.2 %
- அருணாச்சலப் பிரதேசம்: 13.3%
- லட்சத்தீவுகள்: 9.83%
- உத்தரகண்ட் -13.34%
- மேகாலயா -20.41%
- நாகலாந்து-21%
- மணிப்பூர்-16.09%
- மிசோரம்-17.46%
- மேற்கு வங்கம்-18.12%
அதேபோல் பீகார் மாநிலத்தின் 4 தொகுதிகளில் 5% வாக்குகளும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13.34% வாக்குகளும் பதிவாகியுள்ளது.