டீக்கடை நடத்தி சம்பாதித்த பணத்தில் மனைவியுடன் உலகம் சுற்றிய கே.ஆர்.விஜயன் காலமானார்!

KR Vijayan, who became famous all over the world with his wife, passed away with the money he earned by running a tea shop.

டீக்கடை நடத்தி சம்பாதித்த பணத்தில் மனைவியுடன் உலகம் சுற்றி பிரபலமடைந்த கே.ஆர்.விஜயன் காலமானார்.

கேரள மாநிலம் கொச்சியில் டீ கடை வைத்து நடத்தி வந்தவர் தான் கே ஆர் விஜயன். இவருக்கு 71 வயது ஆகிறது. இவருக்கும் அவரது மனைவி மேகனாவுக்கும் திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சிறுவயதிலிருந்தே உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

எனவே கடந்த 1963 ஆம் ஆண்டு டீக்கடை ஒன்றை ஆரம்பித்த விஜயன் அதன் மூலமாக கிடைத்த வருமானத்தை தனது கனவை நினைவாக்குவதற்காக சேர்த்து வைத்துள்ளார். அதன் பின்பாக டீக்கடை வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை வைத்து தனது மனைவியுடன் இணைந்து அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, பெரு உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று வந்தார்.

இவர்களின் உலகம் சுற்றும் பயணம் ஊடகங்களில் வெளியாகி வைரலாகியதை தொடர்ந்து, சில தனியார் நிறுவன தலைவர்கள் இவர்களது உலகம் சுற்றும் பயணத்திற்கு உதவியும் செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் கூட இருவரும் ரஷ்யா சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கே ஆர் விஜயன் அவர்கள் தற்பொழுது உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.